புதுடில்லி: கொரானா ஒழிப்பில் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை சிறப்பாக உள்ளதாக காங்., மாஜி தலைவர் ராகுல் பாராட்டி உள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 4 .5 லட்சத்திற்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய , மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா அளித்த பேட்டியில் ;
அரசு சார்பில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். கொரோனாவால் மக்கள் வெளியே வர முடியாத நிலையால் மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி அல்லது 5 கிலோ கோதுமை வழங்கப்படும். ஜன்தன் வங்கிகணக்கு பெண்களுக்கு மாதம் ரூ.500 வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு சமையல் காஸ் இலவசம். மருத்துவ பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சத்திற்கு இன்சூரன்ஸ். முதியவர், மாற்று திறனாளிகள், விதவைகளுக்கு ரூ. ஆயிரம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.