இட்லி, சாம்பார், முட்டை, பழரசம்: கொரோனா நோயாளிகளுக்கு உணவு

இது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர் கூறுகையில்,காலை 7 மணி: இஞ்சி, தோலுடன் கூடிய எலுமிச்சையை வெந்நீரில் கொதிக்க வைத்து கொடுக்கப்படுகிறது
காலை 8.30 மணி: இரண்டு இட்லி, சாம்பார், வெங்காய சட்னி, சம்பா ரவை கோதுமை உப்மா, 2 வேகவைத்த முட்டை, பால், பழரசம்
காலை 11 மணி: சாத்துக்குடி ஜூஸ், இஞ்சி, தோலுடன் கூடிய எலுமிச்சை கொதிக்க வைத்த நீரில் சிறிது உப்பை சேர்த்தும் கொடுக்கப்படுகிறது.
பகல் 1 மணி: இரண்டு சப்பாத்தி, புதினா சாதம் 1 கப், வேகவைத்த காய்கறிகள், 1 கப் கீரை, பெப்பர் ரசம், உடைத்த கடலை 1 கப்
மாலை 3 மணி: மிளகுடன் மஞ்சள் கலந்து காய்ச்சிய சுடு தீண்ணீர்
மாலை 4 மணி: பருப்பு வகைகளில் மூக்கு கடடை சுண்டல் ஒரு கப்
இரவு 7 மணி: 2 சப்பாத்தி, வெங்காய சட்னி, இட்லி அல்லது சம்பா ரவை கோதுமை உப்மா ஒரு முட்டை ஆகியவை கொடுக்கப்படுகிறது.
டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் முட்டை, பழரசம் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவு பொருட்கள் தொடர்ந்து 3 வேளையும் வழங்கப்பட்டு வருகறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.