இந்தப் பொருள்கள் மற்ற பொருள்களைப் போல மண்ணில் மக்கிவிடும். தாவரங்களுக்கு உரமாகவும்

``பயோ பிளாஸ்டிக் என்பது கரும்பு போன்ற பல வகை தாவரங்களின் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த தாவரங்களிலிருந்து குறிப்பிட்ட ரசாயனங்களைப் பிரித்து, பின்னர் சுத்தப்படுத்துவோம். அதன் பிறகு, கிடைக்கும் மூலப்பொருட்களிலிருந்து பயோ பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கிறோம். பாலிமரைசேஷன் என்ற செயல்முறையின்படி, பிளாஸ்டிக் பொருட்களை உருவாக்குகிறோம். வழக்கமான பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களில் பெரும்பாலானவற்றை இந்த பயோ பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கலாம். இவை சுற்றுச்சுழலுக்கும், இயற்கைக்கும் எந்த தீங்கும் விளைவிக்காது.`` என ஐ.ஐ.டியின் பேராசிரியர் விமல் கட்டியார் கூறுகிறார்.


இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு பல்வேறு வகையான பொருள்களைத் தயாரிக்க முடியும். தினமும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டுகள், கிளாஸ்கள், பொம்மைகள் மற்றும் சிகிச்சைகளில் பயன்படுத்தும் மருத்துவப் பொருள்களும் தயாரிக்கலாம் என கூறுகின்றனர்.


இந்தப் பொருள்கள் மற்ற பொருள்களைப் போல மண்ணில் மக்கிவிடும். தாவரங்களுக்கு உரமாகவும் அவை மாறிவிடும் என்றும் தெரிவிக்கின்றனர்